உயிரான உறவு..

வியாழன் கவி 2288

உயிரான உறவு..

உதிரத்தில் உணவூட்டி
உணர்வுக்குள் அன்பேந்தி
உலகுக்கு வழிகாட்டியவள்
உயிரான உறவானாள்..

கருவினுக்கு காரணியாய்
காலமெலாம் தாங்கி நின்று
கற்றிடவும் வல்லமை தனை
பெற்றிட தந்தை உயிரான உறவாம்..

காதலில் மூழ்கியெழுந்து
கண்ணியம் தனை சுமந்து
இருமன இணைவாகி
இல்லறம் ஆக்கும் உயிரான உறவு..

பிறப்புக்கும் இறப்புக்கும்
இணைப்பிற்கும் பிணைப்பிற்கும்
பந்தத்தின் தொடருகைக்கும்
ஒன்றிக்கும் உயிரான உறவு பல..
சிவதர்சனி இரா
11/2/2026

Author:

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading