மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

” உலகப்பெருவிழா “

ரஜனி அன்ரன்

“ உலகப்பெருவிழா “ கவி….ரஜனி அன்ரன் (B.A) 01.08.2024

உலகப் பொதுவிழா உன்னதப் பெருவிழா
ஒற்றுமையின் ஒருவிழா ஒலிம்பிக் திருவிழா
அழகிய பாரிஸ் நகரினில்
ஈபிள் கோபுர முன்றலில்
செயின் நதியோரத்தில்
அலங்காரங்களும் கண்ணைப் பறிக்க
மக்கள் வெள்ளம் அலைமோத
ஒலிம்பிக் திருவிழா களைகட்டுகிறதே !

உயரம் தாண்டி வேகம் தொட்டோடி
உலகமே ஒன்றுகூடி கொண்டாடும் திருவிழா
ஒலிம்பிக் என்ற பெயரில் பிறக்கும் ஒளி
ஒற்றுமைக்கும் நட்பிற்கும் அடையாளமாகி
உலக நாடுகளின் கனவான பேரொளி
விளையாட்டுக்களும் பற்பல வீரர்களும் பற்பல
வியர்வை சிந்தி வெற்றி கொள்ளும் களமிது !

கண்டங்கள் ஐந்துமிணைந்து வளையங்கள் ஐந்தாகி
அண்டத்தில் ஒன்றோடு ஒன்று கைகோர்க்கும் அழகு
ஒவ்வொரு நாட்டிற்கும் ஒற்றுமையின் சிறப்பே
வேகம் உயரம் வலிமையெனும்
வேத வாக்கை மந்திரமாக்கி
வெவ்வேறு நாடுகள் வெவ்வேறு மொழிகள் ஒருங்கிணைய
விளையாடும் களமிது வீரம் பொங்கும் களமிது
மனிதநேயமெனும் கொடி எங்கும் உயரப் பறக்கட்டும் !

Nada Mohan
Author: Nada Mohan

பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading