அதிகரிக்கும் வெப்பம்

நகுலா சிவநாதன் அதிகரிக்கும் வெப்பம் கோடை வந்தால் கொள்ளை மகிழ்வு வாடை குறையும் வசந்தப்பொழுதாய் வேளைதோறும் வெப்ப விடியல் வேண்டும்...

Continue reading

உள்ளமதில் ஏற்றிடுவாய்

சிவருபன் சர்வேஸ்வரி

உள்ளமதில் ஏற்றிடுவாய்

காலம் உறங்காது கடமை ஓயாது/
சாலம் தேவையில்லை சாதிக்கவேண்டும் எத்தனையோ//
எண்ணத்திலே பாத்திகட்டி ஏதுமே செய்யாமல்//

வண்ணத்திரை போட்டால் வகையும் அறியலாமா//

கண்ணைமூடிக் கனவுகாணும் மானிடா
காசினியை உணர்ந்துவிடுவாய்//

சீரியகுணம் வேண்டும் செய்வதைச் சொல்லவேண்டும்//
வாரியே அணைத்திடுவாய் வழுவாத விழுமியத்தை/_

பாருமோ சிறந்திடவே பண்புடன் நடந்திடுவாய்/_

பகுத்தறிவுடனே பார்ப்பாய் பாங்காய் மிளிரவும்//

வகுப்பாய் நன்னெறிதனையும் வரிப்பாயே மனதிலென்றும்//

துடுப்பாய் பயன்படுவாய் துரிதமும் கொண்டிடுவாய்//

எடுப்பாய் நேர்வழியில்
தொடுப்பாய் பயணத்தை//

விடுப்பாய் எண்ணிவிடு நல்லெண்ணம் கூடிடவே//

தடுப்பாய் அதர்மங்களை தர்மமே வெல்லுமென்று//

உண்மையைச் சொல்லுகின்றேன் உள்ளமதில்
ஏற்றிடுவாய்//
சிவருபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

Continue reading