என் தமிழே-2143 ஜெயா நடேசன்

அமுது என்பார் இனிமை என்பார்
ஆழ்கடல் அழகிய முத்து என்பார்
தேன் மொழி செம்மொழி என்பார்
தெவிட்டாத சுவை பெற்றது என்பார்
அன்னை சொல்லித் தந்த மொழி
ஆராரோ பாட்டில் கேட்ட மொழி
சங்கே முழங்கும் ஒலித்த மொழி
சங்கம் வளர்த்த இலக்கிய மொழி
அன்பை போதிக்கும் அருமை மொழி
இன்பம் தரும் ஆறுதல் மொழி
துன்பம் போக்கும் துடிப்பு மொழி
அழியா வரம் பெற்ற ஆயுள் மொழி
அதுதான் எங்களின் உயிர் மொழி

Author:

பூக்கட்டும் 116 ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 29-09-2026 யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய் சந்தோஷம் பிறக்கட்டும் கண்ணீர் நனைந்த மண்ணினிலே கனவுகள்...

Continue reading

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading