தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

ஒலிம்பிக் ஒளியில்

நேவிஸ் பிலிப் கவி இல (143) 08/08/24

ஏதென்ஸ் நகர் தொடங்கி
நாடு நகரம் சுற்றி பிரன்ஸ் நாட்டினிலே
முலூஸ் , பரிஸ் வதியும்
இரு ஈழத் தமிழரின் கரங்களிலே
பெருமையுடன் பவனி வந்த
ஒலிம்பிக்கின் ஒளிச் சுடர்
பிரகாசமாய் ஒளிரும் பரி்ஸ் நகர்

திறந்த வெளி அரங்கினிலே
வரவேற்பே கோலாகலமாய்
செய்ன் நதியினிலே படகுப் பவனி
அசைந்த கொடிகளில்
நாடுகளின் அறிமுகம்
களிப்போடு கண்டோர் பல இலட்சம்

நகருக்குள்ளே ஒளிர்கின்ற சிறு கிராமம்
பங்கேற்கும் வீரர்களின் உறைவிடமாய்
அடிப்படைத் தேவைகள்
அனைத்துமாங்கே சிறப்போடு
அமைத்திருக்கு

புதுமைகள் புகுந்தது
ஆணும் பெண்ணும் சமமெனவே
துணிச்சலுடன் களமிறங்கி
வீர தீர விளையாட்டுக்கள்
ஆடுகின்ற வேகம்
வென்றெடுக்கும் தாகம்

உற்சாக கூச்சல்கள்
அரங்கம் அதிரும் கரவொலிகள்
நாடுகள் இணைய சமத்துவம் மலர
பார்ப்போர் மனங்கள் மகிழ்வு கொள்ளுது.

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

Continue reading