அதிகரிக்கும் வெப்பம்

நகுலா சிவநாதன் அதிகரிக்கும் வெப்பம் கோடை வந்தால் கொள்ளை மகிழ்வு வாடை குறையும் வசந்தப்பொழுதாய் வேளைதோறும் வெப்ப விடியல் வேண்டும்...

Continue reading

ஒளியிலே தெரிவது……,,,

இரா.விஜயகௌரி

ஒளியிலே தெரிவது உன் கனலோ
அன்று அனலென பொசுங்கிய உனதுடலோ
கனவினைச் சுமந்து நீ கனலாகினாய் எங்கள்
விடிவினை நோக்கியதுன் பயணம்

எரியிடை இடப்பட்டதோ உனதடல்தான்
எங்கள் உயிர்ப்புறு நினைவினில்வாழ்பவனே
கணமுமே இடரினைச் சுமந்தவன்நீ
மறந்து நின் தியாகத்தை நடத்தலாகுமோ

அன்னை தமிழென கொண்டதுன் வாழ்வின்வழி
அன்று அனலிடை புழுவென துடித்தனை நீ
இன்று ஒளி தரும் வாழ்வினை நாம் கொடுத்தால்
நின் அகத்தினில் பெருஞ்சுடர் ஏற்றலாகுமோ

உயிர்ப்புறு செயல்களால் உனை வணங்கி
உதவிடும் கரங்களால் வாழ்த்தி நின்று
ஒற்றுமை வேத்த்தால் உன் சுவடு தொட்டு
உயர்வுறு தமிழினால் வரலாறு சொல்வோம்

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

Continue reading