ஒவ்வொரு இதயத்துள்ளும் மறைந்திருக்கும் தலைவன் பகுதி 1

ஜெயம்

ஆதவன் மண்ணில் உதித்த நாள்
வீரம் தன் கால்கள் பதித்த நாள்
தேசத்தின் நேசன் பிறந்தநாள்
புரட்சியின் விடியல் புலர்ந்த நாள்

தமிழினம் இருப்பது உலகுக்கு தெரிந்தது
போர்களின் தந்திரம் உன் பெயர் பதித்தது
பாருக்குள் பரந்துமே உன் புகழ் விரிந்தது
பெற்றிட்ட வெற்றிகள் வான்வரை உயர்ந்தது

அடிவாங்கி அடிவாங்கி அனைத்தையும் இழந்தோம்
அதிகாரப் பிடியினில் வாய் மூடிக்கிடந்தோம்
புயலெனப் பிறந்தான் இடியென இடித்தான்
இலக்குகள் கொண்டு விலங்கினை உடைத்தான்

Author:

ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

Continue reading