” தண்ணீருக்காய் திரளும் போர்மேகங்கள் “

ரஜனி அன்ரன் (B.A)26.03.2026…தண்ணீருக்காய் திரளும்…..

போர்க்கால மேகங்கள் புடைசூழ
கார்கால மேகமாய் கரும்புகையாய் வானம்
தண்ணீருக்காய் திரள்கிறது போர்மேகமாய்
அழகிய நீலவானமும் அலங்கோலமானதே
வல்லரசின் மிதவாதப்போக்கில்
அல்லாடுதே உலகப்பரப்பும் !

வானம்பார்த்த பூமிக்கும் வாடிப்போன பயிருக்கும்
வாடிக்களைத்த மானிடனுக்கும்
தண்ணீர்தான் முதல்தெய்வம்
தாகம்தீர்த்த கிணறுகளோ இன்று
சோகத்தோடு சாட்சிசொல்லும் குழியாச்சு
உலகில் முக்கால்பங்கும் உடலில் முக்கால்வீதமும்
நிறைந்திருப்பது நீராலேநீராலே
நீரின்றி உலகேது ? நீரின்றி வாழ்வேது ?

மூன்றாம்உலக யுத்தமொன்று முற்றிலுமாய் நீருக்கென்றாக
தேசஎல்லைகள் எல்லாம் நீரின் திசைக்காய் நிற்க
ஹோர்மூஸ் நீரிணையை பணயம்வைத்தல் முறையோ ?
பாயும்நதியோ பொதுச்சொத்து
அதற்கு வேலியிடுவது நியாயமோ !

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading