” தண்ணீருக்காய் திரளும் போர்மேகங்கள் “

ரஜனி அன்ரன் (B.A)26.03.2026...தண்ணீருக்காய் திரளும்..... போர்க்கால மேகங்கள் புடைசூழ கார்கால மேகமாய் கரும்புகையாய் வானம் தண்ணீருக்காய்...

Continue reading

தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள்

நகுலா சிவநாதன் தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள் கார் கால மழைமேகம் கண்ணிமைக்கும் நேரத்திலும் போர் மேகம் சூழ்ந்தாலும் வாரியிறைக்கும்...

Continue reading

கண்ணீர்….

கண்ணீர்….
வலிகளை மறைத்திடவோ முகத்தினிலே
சிரிப்பை அணிந்தேனே;

ஆனாலோ கண்களின்
கண்ணீரோ – சில
சமயம் அவற்றை வெளிக்காட்டிவிடும்
விந்தைதான் என்னவோ??

சில நேரங்கள் தனிலே
உதட்டில் சிரிப்பு
கண்களில் நீரோ வழிந்தோடும்!!

மழை நீரை இரசிக்கும்
மக்களோ
அதை இரசிக்கும் வேளை;

என் மனதில் என்னவோ
வானம் தன் சோகங்களை
நினைத்து வடிக்கும்
கண்ணீர் தான் என்னவோ மழையாய் பொழிகிறது என்று;

என்ன விந்தை பாருங்கள்
வானமோ தன் வேதனை நினைத்து
வடிக்கும் கண்ணீர்
தனையே நாம் மழையாக கொண்டாடுகிறோம்;

இவ்வாறு தான்
சிலர் கண்ணீரும்
சுற்றத்தின் கொண்டாட்டத்திற்காய்
பொழிகின்றது….
விண்ணவன் – குமுழமுனை…

Author:

ராணி சம்பந்தர் அன்பில் உயர்ந்த பிறப்பிடம் ஆதரவில் பதிந்த சிறப்பிடம் இனிமை உதித்த தரிப்பிடம் ஈரேழு ஜென்மும் போற்றும் உலகத்தோரின்...

Continue reading