கீத்தா பரமானந்தன்

பாமுகமே வாழி!

பாரொளிரும் கதிரொளியாய்
பரவசத்தின் ஊற்றாய்
எழுத்தில் பூத்திட்ட
எழிலான நந்தவனம்!
நாளெல்லாம் மிளிர்கின்ற
நாற்றுக்களின் பட்டறை!

ஆழத் திறனறிந்து
ஆற்றலினை வளர்க்கின்ற
வேழத்தின் கொற்றம்!ஒ
விழைச்சலின் பெருநிலம்
இழைத்திட்ட வைரமென
எழுந்திட்ட முதல்ஒலி!

வளர்த்திட்ட கரங்களின்
வரித்தடங்கள் ஏராளம்!
உளிபட்ட கற்சிலையாய்
உரமிட்ட பதியமுடன்
உயர்ந்திட்ட அகவை
உவப்பாய் இருபத்தேழு!
பிறந்தநாள் வாழ்த்துகளைப்
பூரிப்பாய்த் தருகின்றேன்!

பருவத்தின் பேதமின்றி
பட்டைதீட்டி நிற்கின்ற
படைப்பின் கூடாரம்
பல்திறத்தின் ஆணிவேர்!
அடுத்த தலைமுறையின்
ஆக்கலின் அரிச்சுவடி
வடித்த பெருமைகள்
வரலாறாய் நின்றொளிரும்
தொடரட்டும். வெற்றிகள்
பாமுகமே நீவாழி!

கீத்தா பரமானந்தன்
10-06-24

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் பருவக் காலப் பாதிப்பிலே பங்கு கண்டு பொங்குவாய் உருவக் கோலச் சாதிப்பிலே முங்கியபடியே மொங்குவாய் கரும வினை...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்தகவி இலக்கம் _216 "பொங்குவாய்" தை திங்கள் வந்ததடி தோழி தரணிமெல்ல மகிழ்ந்தடி ஆதவனார் வந்தாரடி! பொங்கலிட்டோம் பூஜை...

    Continue reading