மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

கீத்தா பரமானந்தன்

ஆசான்!
அறிவெனும் ஒளியை ஏற்ற
அனுதினம் செதுக்கல் செய்தே
நெறியுடை பாதை தன்னை
நெஞ்சினில் பதியஞ் செய்தே
செறுவுடை மனித ராக்கிச்
செழிப்புடன் நிமிர்தி வைக்கும்
பொறுப்புடை ஆசான் தன்னைப்
போற்றியே வணங்கி நிற்போம்!

ஊரவர் பிள்ளை யெல்லாம்
உறவெனக் கூட்டி வைத்தே
ஆரமாய் மிளிர வைக்க
அனுதினம் கரைப்பர் தம்மை!
பாரமாய் எண்ணி டாமல்
பற்றுடன் பாடஞ் சொல்லித்
தாரணி தாங்கும் வண்ணம்
தங்கமாய் மின்னச் செய்வார்!

இருளெனும் மூடம் போக்கி
இலக்குடன் துலங்க வைக்கும்
மருவிலா மேலாம் ஆசான்
மதியதன் ஒளியா யென்றும்!
பெருமையா யெங்கும் உலவும்
பேறினைத் தந்த மேலாம்
குருவுடை ஆசி வேண்டிக்
குறைவிலா மேன்மை காண்போம்!

கீத்தா பரமானந்தன்

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading