இயற்கை வரமே இதுவும் கொடையே
-
By
- 0 comments
வரம்பு மீறாதே
-
By
- 0 comments
கீத்தா பரமானந்தன்
அழியாத கோலம்!
அன்னை மடியில் அவதரித்த போதிலே
ஆடிஅடங்கும்வரை அசைக்க முடியதாபடி
ஆண்டவன் தலையில் ஆழமாய் போட்டானே
அழியாத கோலமொன்றை தெரியாத கோலமாய் !
சோலைக் குயிலெனச் சுற்றிப் பறந்து
சொர்க்கத்தின் நிழலில் சுகந்தம் கண்டு
வாலைக் குமரியாய் வாஞ்சைத் துள்ளலில்
வனப்பாக வரைந்தது வண்ணக் கோலங்கள்
நித்தியத்தின் வாசலில் நிமிடத்தில் யுத்தம்
சத்தமின்றிப் போட்டது சடுதியிற் கோலம்
சுற்றியே நின்ற சுந்தரங்கள் விட்டு
ஒற்றையாய் வந்தது ஓலமிடுங் கோலமாய்!
வசதியிற் புரண்டாலும் வனப்பில் உருண்டாலும்
வாட்டமுடன் பெற்றவர்கள் வழியனுப்பி நின்றநிலை
எப்போதும் நெஞ்சினிலே மக்காமல் மழுங்காமல்
நீக்கமற நிறைந்திருக்கும் அழியாத கோலமாய்!
கீத்தா பரமானந்தன்
04-11-24
வண்ணக்கனவுகளை வாஞ்சையோடு போட்டேன்
வாலைப்பருவத்தின் வனப்போடு மகிழ்ந்தேன்
சோலைக் குயிலாய் காதலில் கானம் இசைத்தேன்
சொர்க்கத்தில் நானும் வாசம் செய்தேன்
கனவுகள் வளர்த்தேன் கற்பனை வடித்தேன்
காற்றில் கரைந்தேன் கானம் பாடினேன்
கணமும் தவமாய் போற்றித் துதித்தேன்
காலம் போட்ட தே அழியாத கோலத்தை
யுத்தமென்னும் பேரில் முந்தி வந்தான்காலன்
சிற்றிநின்ற சுகந்தம் கொத்துக் குண்டாலே
குற்றுயிராய் கண்முன்னே குதறப்பட்டு
உடல்சிதறி கண்ட கோலம்
மனதில் என்றுமே அழியாத கோலமாய்
காலமும் மாறும் கோலமும் தேயும்
மனதில் என்றும் அழியாத கோலமாய்
வாழ்வின் வடுவாய் என்னுள்ளே
வரைந்ததே அழியாத கோலத்தை
கீத்தா பரமானந்தன்
15-03-2017

Author: Nada Mohan
-
By
- 0 comments
-
By
- 0 comments