கெங்கா ஸ்ரான்லி

சந்தம் சிந்தும் சந்திப்பு
வெற்றிப் பயணம்
————
வீழுந்தால் எழும்பித்தான் ஆகவேண்டும்
தொடங்கினால் முடித்தே தீரவேண்டும்
பழுத்தால் பழம் சாப்பிடத்தான் வேண்டும்
புளித்தாலும் கறிக்கு புளிவிடத்தான் வேண்டும்
பிறந்தால் வாழ்க்கையில்
பயணிக்க வேண்டும்
ஆயுள் முடிந்தால் உடலைவிட்டு உயிர் போகவேண்டும்
இங்கே பிறந்தோம் வாழ்ந்தோம்
இறப்போம் இதுவும்
வெற்றிப் பயணம் தானே
போகும் பாதையில் கல்லும் முள்ளும்
போகவேண்டிய இடம் செல்ல
என்ன செய்யலாம்
பாதை சீராக்கி விட்டு செல்வதா
பாதை மாற்றி போவது நல்லதா
பயணத்தை எப்படி வெற்றியாக்கலாம்
இதுபோல பல சிந்தனையில்
யோசித்தே காலநேர விரயம்
கரும்ம் பல சிரம்ம்
சேரும் வழியும் முடக்கம்
முயன்று செயல்படு
வெற்றிப் பயணம் உதயம்!
நன்றியுடன்
கெங்கா ஸ்ரான்லி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் அன்னை தரணியில் தாய்க்கு நிகர்யாதும் உண்டோ தற்பெருமை இல்லா காத்திட்ட தெய்வம் அழகுபெற்ற வதனம் பழகுவதும் உறவாய் அன்பிலே இருப்பிடம் பண்பிலே மேலானவர் எட்டுமகவுகள்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

    Continue reading