கெங்கா ஸ்ரான்லி

அகதி
——
அன்னை அல்லத்தில் பிறந்தோம்
அழகான சுற்றம்சூழ வளர்ந்தோம்
இன்பமான வாழ்க்கை வாழ்ந்தோம்
இடையில் என்ன தடைவந்தது போர்ச்சூழல்
அகதியாய் புலப்பெயர்வு
அந்நிய நாட்டில்
வரும்போது என்னவோ அகதிதான்
இப்போது நாம் இந்நாட்டவர்
பெருமையுடன் பேசிக் கொள்கிறோம்
ஓட ஓடி உழைத்தோம் சொந்த்தும்
வந்தது
சுகந்தமும் வந்தது
அகந்தை யுடன் ஆடம்பரமும் கண்டது
வந்தவர் மறந்தாச்சு
மனிதமும் பறிபோச்சு
பணம் பணம் இதுவே கதையாச்சு
வாழ்க்கைக்கு பணம்வேண்டும்
பணம்தான் வாழ்க்கை இல்லை
இதை உணருவாரில்லை
தமிழ் வளர தம்மை இழந்தோரும் உண்டு
தமிழ் வளர்க்க புகழுக்காக
தம்மை உயர்த்தினோரும் உண்டு
உண்மையாக பாடுபட்டோர் ஊமையாக
புகழுக்காக பாடுபட்டோர் உன்னதநிலையாக
இதில் உண்மை எங்கேயுண்டு
உண்மையாய் உழைத்தவரல்லோ அவர் சுமக்குறார்
அகதியாய் வந்து வாழ்வதை மறந்த தமிழர்
நாளை நாம் யாரென்பதை
நினைத்துப் பார்ப்பாரா

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

    Continue reading