தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

கெங்கா ஸ்ரான்லி

மூத்தோர்
இதயத்தின் நாதம் இன்னிசை மீட்டிட
இளமை நினைவுகள் இன்ப சாகரத்தில்
எந்தையுடன் வாழ்ந்த காலமது இனிக்க
தந்தையும் தாயும் தம்மையே தந்தனரே
எண்ணி நிதம் சோறு உண்கையில்
தண்ணி தரயாருமில்லை விக்கையில்
எண்ணமாய் மாய்கிறேன் எனது பெற்றோரை
என்றும் என் இதய வானில் பறந்தே
கண்ணாக காத்தவர் கள்ளமில்லா மனத்தவர்
மண்மீது காதல்தானும் மறுஉலகம் சென்றுவிட்டார்
தண்ணிலவாய் தரணியிலே தங்கமாய் சொலித்தவர்
இன்னுமவர் இதயத்தால் நெஞ்சுருக வைத்தவர்
தன்னலமில்லா பெற்றார் பிள்ளைகள் ஆறு
அதில் ஒன்றுதானே நானும்
கண்ணீர் துடைக்க உங்கள் கைகள் தேடுது
காணவோ உள்மனம் ஏங்குது
எண்ணிலடங்கா சோகம் உள்மனதில் வேகுதே
வந்து தணியுங்கள் தாயும் தந்தையும்
சேயின் ஏக்கத்தை
நொந்து மடியும் உமது பிள்ளையின்
சோகத்தை
மூத்தோர் நினைவலை முற்றுமாய்
நினைத்தே முறுகுகிறேன் மனத்தில் மீட்டியே
நன்றியுடன்
கெங்கா ஸ்ரான்லி
22.3..23 ச

Nada Mohan
Author: Nada Mohan

    சந்த கவி இலக்கம் _196 சிவாஜினி சிறிதரன் "களவு" பசி பட்டினி பஞ்சத்தால் களவு பாத்திருந்து திருடுபவர் வழித்தெருவில் கொள்ளையடிப்பு! உழைக்க பிழைக்க...

    Continue reading