கோசலா ஞானம்

சந்தம் சிந்தும் சந்திப்பு

மணி

மணியின் ஒலிச்சத்தம் மனைக்குக் கேட்டால்
மகிழ்வைத் தருமென்பது முதியோர் வாக்கு
பணிக்குச் செல்ல பள்ளியெழுப் புகின்றமணி
பள்ளிச் சிறார்களை பக்குவப் படுத்தும்

மணியின் கடமை மனுநீதி சொன்னது
மலரும் பொழுதில் காண்டா மணியோசை
புலரும் பொழுதை புகட்டிடும் ஆலயமணி
தலத்தின் கதவில் தொங்கிடும் மணிகள்

திறக்கையில் ஒலித்து துதிபாட வைக்கும்
தூண்டா மணிவிளக்கு தினமும் எரியும்

கோசலா ஞானம்.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் அன்னை தரணியில் தாய்க்கு நிகர்யாதும் உண்டோ தற்பெருமை இல்லா காத்திட்ட தெய்வம் அழகுபெற்ற வதனம் பழகுவதும் உறவாய் அன்பிலே இருப்பிடம் பண்பிலே மேலானவர் எட்டுமகவுகள்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

    Continue reading