கோசலா ஞானம்

சந்தம் சிந்தும் சந்திப்பு

தலைப்பு

சிந்தனை சிறப்பாய் சிறகு அடிக்க
பந்தி பந்தியாய் பாவும் புனைய
தந்திடும் தலைப்பு துரிதமாய்க் கிறுக்க
வந்திடும் கவியும் வசமாய் என்னிடம்

எதுகை மோனை இணைந்தே நிற்க
வதுவை நானும் வளமாய்க் கிறுக்க
புதுமைக் கவியும் புதுசா வராது
செதுக்கிடும் சிலையும் சங்கதி சொல்ல

தலைப்பு வசமாய்த் தந்திடும் கவிகள்
மலைப்பு இல்லாத மகிமை சொல்லிடும்

கோசலா ஞானம்.

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading