மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

க.குமரன்

சந்தம் சிந்தும்
வாரம் 242

நீரழிவு
காதல் என்னும் இனிய தேவதையை
உன் உதிரத்தில்
கண்டேன் என்றாள் வைத்தியர்

கனப் பொழுதும்
நீ அசந்தால்
காவியமாவாள்
உன்னிடம் என்றார்!

தித்திப்பை நாவில் எடு
திகட்டும் கசப்பை அவளுக்கு
கொடு என்றார்!…

அச்சம் சில நாள் என்றாலும்
அவள் என்னை வசப்படுத்தினாள்
நித்தம் என்னில் வளர்ந்து
நிதம் என்னை குழைக்கின்றாள்
சின்னா பின்னப்படுத்தி!.!

உன்னில் நான் பாதி
உன் இதயத்தை ஸ்தம்பிக்க
வைக்கவா?
என்கின்றாள் சாகசக்காரி!

வயிற்றில் குத்தி குத்தி
தடுக்க பார்க்கின்றேன்
அவள் காதலை!

கும்பிடு போடுகின்றேன்
என்னை விட்டு விடு என்று!
கோபம் கொள்கின்றாள்
என் சலரோக தேவதை!

அவள் காதல் என் தேகத்தில்
ஏகமும் அவள் வசமாக!…..
😔
க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading