பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

சக்தி சக்திதாசன்

பாவேந்தா ! பாரதிதாசா !
பாவுக்குள் தீ வைத்த மாகாகவி
பாரதியெனும் கனலின்
பா தீப்பொறியாய் எழுந்து
பாரிதனில் பாங்காய் நீயும்
பற்றி எரிந்தாய் பாக்கனலாய்

பாடிய கவிதைகளெல்லாம்
பாதை தவறிய சமூக அநீதிகளை
பா சாட்டை கொண்டே
பா தண்டனை அளித்தனவே

பாரினில் கண்ட மொழிகளில்
பாரது தமிழ் தானினிதென
பா கொண்டே பாவேந்தனே நீ
பாடிக் களித்தனையே !

பாவையர் அனைவரும் மூடரென
பாவியர் வகுத்திட்ட விதிகளை
பா பல கொண்டே நீ நொறுக்கினாய்
பாவலர் அனைவருமுனைப் போற்றி
பாரினில் ஏற்றிட புகழ் படைத்தனை

பாரதியெனுமோர் பா ஆசிரியனின்
பா மாணவரில் முதல்வனாய்
பாமுகம் எடுத்திட சுப்புரத்தினமாகிய நீ
பாரதியவனின் தாசனாகிய மகிமை
பாரினில் சாதிக் கொடுமையழிந்திட
பாமாலைகள் தொடுத்தொரு வேள்வி
பலமுனைப்புடன் நடத்திட்ட புலவனய்யா

பாவலர் நினைவுகள் தாங்கிப்
பாரில் பல வந்து போயினும்
பாரதிதாசனாம் உந்தன் நினைவினை
பரிசாய்த் தாங்கிட என்னுள்ளம்
பலவரம் பெற்றது என்றுணர்கிறேன்
பாவெந்தன் ஆசிவேண்டி யானுமொரு
பாமரன் கவிமாலை யாத்துந்தன்
பாதக்கமலங்களில் பணிகிறேன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading