தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

சக்தி சக்திதாசன்

மூண்ட தீ
முன்னை ஒரு பொழுதில்
ஈழத்திலே என்றெமக்கு
இயம்பியதோ இராமாயணத்தில்

மூண்ட தீ
அதனை மூட்டுவோர்
ஆயிரம் காரணங்கள்
ஆயினும் ஆகாதென்பது நீதி

மூண்ட தீ
தாண்ட முடியாத
தடைச்சுவர் எழுப்பியெமை
தாளாத சுமைக்குள் தள்ளியதே !

மூண்ட தீ
முழுதாய் எரித்தது
காலங்களாய் வாழ்ந்திட்ட
நூலகச் சொத்துக்களை

மூண்ட தீ
மூட்டியது பேதத்தை
முற்றும் அழித்தது எமது
முழுதான சகோதர வாஞ்சையை

மூண்ட தீ
ஆண்ட. வர்க்கத்தினரின்
ஆற்றாமை காட்டியெமையே
ஆறாத்துயரில் வீழ்த்தியது

மூண்ட தீ
நெஞ்சத்தை எரித்திடினும்
வஞ்சத்தைத் தாண்டி காண்போம்
கொஞ்சமேனும் அமைதியெம் வாழ்வில்

சக்தி சக்திதாசன்

Nada Mohan
Author: Nada Mohan

    சந்த கவி இலக்கம் _196 சிவாஜினி சிறிதரன் "களவு" பசி பட்டினி பஞ்சத்தால் களவு பாத்திருந்து திருடுபவர் வழித்தெருவில் கொள்ளையடிப்பு! உழைக்க பிழைக்க...

    Continue reading