முயற்சி தரும் பயிற்சி 774

செல்வி நித்தியானந்தன் முயற்சி தரும் பயிற்சி சரீரத்தின் பாதுகாப்பு சஞ்சலமற்ற தற்காப்பு சந்தோச முயல்வு சரிநிகரான நகர்வு காலையிலே. சேர்வும் கற்றதை...

Continue reading

முயற்சி தரும் பயிற்சி

செல்வி நித்தியானந்தன் முயற்சி தரும் பயிற்சி சரீரத்தின் பாதுகாப்பு சஞ்சலமற்ற தற்காப்பு சந்தோச முயல்வு சரிநிகரான நகர்வு காலையிலே. சேர்வும் கற்றதை...

Continue reading

சக்தி சிறினிசங்கர்

அனைவருக்கும் உற்சாக வணக்கம்!
வியாழன் கவிதை நேரம்
கவித்தலைப்பு
தியாகமே தீர்ப்பானதா
***************************
பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நன்றி வானிலும்
நனி சிறந்தனவே !
தேசத்தை நேசித்த நெஞ்சம் கொண்டு
பாசத்தைக் துறந்தான் பார்த்தீபன்!
ஊரெழுவில் அவதரித்து
உலகமே பேர் சொல்லும்படி
உன்னதமெனப் போற்றும் கொள்கைக்காக
பசித்திருந்தான் பன்னிரு நாட்கள்
பாதகம் செய்தது பாரதம்
ஆதரவின்றி ஆகுதியானான்
மெழுகுவர்த்தியாய் உயிர்த்தியாகம் செய்தும்
மக்கள் புரட்சி வெடித்தும்
துக்கம் இன்றும் தொடர்கதையாய்……
அவன்போல் எத்தனை எம்மின ஆத்மாக்கள்
செய்த தியாகம் இன்னும் தணியாத தாகமாய்
தீர்ப்பில்லா தியாகங்களாய்
எம்மினத்தின் சாபமோ இது?

கவிதை நேரத் தொகுப்பாளினிகட்கு வாழ்த்துகள். திரு.திருமதி நடா மோகன் அவர்கட்கு மிக்க நன்றி.
அனைத்துக் கவிப் படைப்பாளர்கட்கும் பாராட்டுகள் கூறி அன்புடனும் நன்றியுடனும் விடைபெற்றுக் கொள்கிறேன்.
நன்றி வணக்கம்!

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading