மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

சக்தி சிறீனிசங்கர்

வணக்கம்!
சந்தம் சிந்தும் சந்திப்பு
கவித்தலைப்பு
கலவரம்
**********
கருத்துகள் முரண்படும் காரியம் தடைபடும்
செருக்குடன் இருப்பர் செய்வனே செய்யார்
அருவருக்கும் ஆட்சி ஆளணி நெறிமுறை
உருக்குலைய வைக்கும் உலகையே உலுப்பும்
கலகம் உண்டாக்கிக் கவிழ்த்துப் போடுவர்
அலசல் ஆயிரம் அவைகளில் அரங்கேறும்
விலகவும் மாட்டார் வீணிலே வாதமும்
சலனமும் நிறைந்து சமுகம் உடைபடும்
கவலையும் கொள்ளார் கலவரம் பெருகினும்
அவதிகள் பட்டே ஆண்டிகள் ஆகிடும்
மக்களைக் காத்திட மகேசனின் அருளே
இக்கணம் உறுதி
இயம்புவேன் நானே!

நன்றி வணக்கம்!

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading