அதிகரிக்கும் வெப்பம்

நகுலா சிவநாதன் அதிகரிக்கும் வெப்பம் கோடை வந்தால் கொள்ளை மகிழ்வு வாடை குறையும் வசந்தப்பொழுதாய் வேளைதோறும் வெப்ப விடியல் வேண்டும்...

Continue reading

சக்தி சிறீனி சங்கர்

இனிய இரவு வணக்கம்!
சந்தம் சிந்தும் சந்திப்பு!
கவித்தலைப்பு
நீர்க்குமிழி!
*************
கண்ணாடிக் குமிழ்போலக்
காடசியளிக்கும் காற்று நிரம்பிய நீர்க்குமிழி
காற்றுப் பட்டதும் உடைந்து விடுகிறது !
அலைமோதும் ஆசைகள்
கலைந்துபோகும் கனவுகள்
அவரவர் உள்ளத்தில்
ஆயிரமாயிரம் எண்ணங்கள்
தோன்றி மறையுமே!
தேடும் செல்வமும் நிலைக்காது
எழில்கொஞ்சும் இளமையும் நிலைக்காது
இந்த ஊனுடலும் நிலைக்காது !
அறியாமையில் உழல்கின்றோம்
அதீத ஆசையில்!
நிலையானது எதுவெனில்
நிலையாமையே
என்றறிவோம்!

ப.வை.அண்ணா! உங்கள் பணி பாரிய பணி. மிகுந்த வாழ்த்துகள். கூட இருந்து திறனாய்வு செய்யும் பால ரவி அவர்களே! பாராட்டுகள் .
திரு.திருமதி நடா மோகன் அவர்களுக்கும் நன்றி!

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

    Continue reading