சக்தி 86

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
07-10-2025

மாற்றம் என்பது உலக நியதி,
மாறாமல் நிலைப்பது சக்தி
பக்தியாய் வேண்டி நின்று
பராசக்தி அருள் பெற்று

உள்ளத்தொளிரும் விளக்காய்
ஊக்கம் தந்திடும் ஒளியாய்
உன்னுள் சக்தியை இருத்தி
உலகு முழுதும் தேடாமல்

என்னால் முடியுமெனும் வார்த்தை
ஏணிப்படியாய்க் கோர்த்து
விதைக்குள் உறங்கும் மரம் போல,
உனக்குள் உறங்கும் சக்தி கண்டு

விண்ணைத் தொட்டு நீ
வெற்றிக்கு வழி வகுத்து
அன்னை பராசக்தியின் ஒளியாய்
அகிலத்தையும் காப்பாயே,…..

Jeba Sri
Author: Jeba Sri