சர்வேஸ்வரி சிவருபன்

எச்சம்
<<<<<<<<<

எச்சத் துளியினிலே எம் வாழ்வு மலர்ந்ததுவே
ஞானம் கொண்டவருள் நல்லவருகையானதுவே
பாருமறியும் பலவும் மலர்ததுவே
யாரும் அறியாமல் இறைவன் விளையாடி நின்றானே

கூறும்படி கூத்தன் அருளின் நிலையினிலே

கூர்மை பெற்று மனிதர் துலங்கிடவே
ஒவ்வொரு எச்சத்தையும் மனிதன் பின்பற்றி நின்று விட்டால்
ஒவ்வொன்றாய் விடியலில் உதித்து நின்றிடுமே

கற்றறிவு கொஞ்சமே ஆனால் நீவீர்
மிச்சறிவு பெற்றுவிட எச்சமது தேவை
சுற்றறிவு உனக்கு இருந்தால் நன்று
பற்றறிவு பாருக்கு ஒரு விடிவே பாரும்

எச்சங்களின் மிதப்பினிலே இயற்கை
எழிலகுறும்

ஏகாந்த ஈர்ப்பினிலே இயன்றிடும் வையகமும்
மந்தமாருதம் வீசட்டும்
ஒளிகளுடன்

எந்த மாற்றமும் இல்லை
எச்சங்களின் வரவு தானே

கவிஞர்
சிவருபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan