சர்வேஸ்வரி சிவரூபன்

நயந்தே நின்றுவிடு
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^50

பண்பாடு பரணியை மதித்துப் பாரு

விண்பாடும் விழுமியம் சேர்ந்தும் நின்றால்

கண்ணும் கருத்தும் மேம்படவும் நடந்தால்

மண்ணும் போற்றும் உன்னையும் வாழ்த்தும்

மலரும் மனமும் மென்மையானது

பலரும் பொழுதிலும் நல்லதைத் தேடுவாய்

சிலவும் வரவும் மீட்டிட வேண்டுமே

சுழரும் நிலையிலே நின்றும் விடாதே

தயவு பண்ணி வாழும் நிலையில்

நயவு மேம்பட்டு நிற்பதும் உண்மையே

கயவு கொண்டே வாழ்தலும் கேடே

செயல்வு கண்டு செய்திடுவாய் நன்றே

உருவமானது இல்லையே உண்மையின் பாதையும்

பருவமானது பார்த்து நின்றே உடையும்

துருவம் போன்றது ஒப்புயர்வான ஒழுக்கம்

கர்வம் இல்லாதது கண்ணியத்தின் நேர்மையும்

சாதிக்க வேண்டும் என்றே நினைத்தால்

பாதிக்காமல் பணிந்தே நின்றே செயற்படு

மீதியாய் இருப்பது ஒன்றுமே இல்லையே

நாதியற்று நில்லாமல் நயந்தே நின்றுவிடு

கவிஞர்
சிவரூபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan