அதிகரிக்கும் வெப்பம்

நகுலா சிவநாதன் அதிகரிக்கும் வெப்பம் கோடை வந்தால் கொள்ளை மகிழ்வு வாடை குறையும் வசந்தப்பொழுதாய் வேளைதோறும் வெப்ப விடியல் வேண்டும்...

Continue reading

சாளரத்தின் ஒளியினிலே

ஜெபா ஸ்ரீதெய்வீகன்

அனைவருக்கும் வணக்கம்🙏
வியாழன் கவிதை
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-35
19-09-2024

சாளரத்தின் ஒளியினிலே..

சேவல்கள் கூவுவதும்
சேவைகள் தொடங்குவதும்
காக்கைகள் கூடுவதும்
காவல்கள் முடிவதுவும்!

கதிரவனின் வருகையிலே
காத்திருந்த பனி விலக
கண் கண்ட குளிர்ச்சியிலே
கனம் கொண்ட மனம் அகல

சாளரத்தின் ஒளியினிலே
சகதி வாழ்க்கை வேண்டாமென
உறக்கத்தை தொலைத்து
உறவுக்காய் உணவு தேடி

வரவிற்கேற்ப செலவு செய்து
வாஞ்சையோடு கொடுத்துதவி
நேர்மையோடு வாழ்ந்திட
நலிந்திடும் வலிகளெல்லாம்!

ஏழையென்ற பேச்சும் வேண்டாம்
எதற்காகவும் முனகல் வேண்டாம்
முயற்சி ஒன்றை மூச்சாய் கொண்டு
முன்னேறி நாமும் விடுவோம் .

நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

Continue reading