02
Apr
ரஜனி அன்ரன் (B.A) " சிறப்புக் குழந்தைகள் " 02.04.2026
சித்திரைத் திங்கள்...
02
Apr
மெல்ல துளிர்க்கும் வசந்தம்
-
By
- 0 comments
நகுலா சிவநாதன்
மெல்ல துளிர்க்கும் வசந்தம்
மெல்ல துளிர்க்கிறது வசந்தம்
மேனியை சிலிர்க்க வைக்கும் காற்று
செல்லமாய் அழைக்கும்...
01
Apr
போரிருல் எப்போது நீங்கும்
-
By
- 0 comments
அமைதி பூங்காவான பூலோகம் அன்று
அமைதியைக் கெடுத்து போர்கோலம் பூண்டதின்று
வெறியை வெற்றியாக்கி...
சாளரத்தின் ஒளியினிலே..,,,
ரஜனி அன்ரன்
“ சாளரத்தின் ஒளியினிலே……..கவி…ரஜனி அன்ரன் (B.A) 19.09.2024
சாளரம் ஒரு சாமரம்
சாகசம் காட்டிடும் அதிசயம்
கதை சொல்லும் புத்தகம்
கலைக்கூடம் சாளரம்
கண்களுக்கு நல்விருந்து
காட்சிகளின் ஓவியம் சாளரம் !
சாளரத்தைத் திறந்ததும்
ஒளி வந்து தொட்டுச் செல்ல
தென்றல் காற்றும் தழுவிட
தெம்மாங்குப் பாட்டிசையும் கேட்டிட
புத்துணர்வாகுமே உள்ளமும்
புதிய நம்பிக்கையும் பிறக்குமே !
பரந்து விரிந்து கிடக்கும் பூமியை
பரவசமாய் பார்த்து ரசிக்க
பசும் சோலைகளைக் கண்டு களித்திட
பட்சிகளின் இனிய கீதத்தைக் கேட்டு மகிழ
திறந்திடுமே சாளரமும் ஒளியோடு !
சாளரத்தின் ஒளியினிலே
மழைத்துளிகள் ஓவியமாக
நட்சத்திரக் கூட்டங்கள் கண்ணைச் சிமிட்டிட
கண்களும் குளிர சாளரமும் சாமரம் வீசிட
வாழ்வின் அழகான பரிசு சாளரமே !
Author: Nada Mohan
02
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
நன்றி
எழுத கவிதை வராது
எப்படி எழுதி வாசிப்பது
எதை கருவாய்எடுப்பது
என்று சொன்ன போது
முடியும்...
31
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
பள்ளிக்காலமே.....கல்வி எனும் பெருவிளக்கு
கற்றுத்தரும் கூடமிது
துறைசார்ந்து உருவாக
தூக்கி...
31
Mar
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
முதன் முதலாக முயற்சி
பதிலுக்குப்பதில் பயிற்சி
எதிலும் உயர்ச்சி பெறப்
போட்டி உயிரானந்தமே
ஐந்தோ அறியாப் பருவம்
பதினைந்து...