சித்திரை மகளே நீ வாழி!

சித்திரை மகளே நீ வாழி!

சித்திரை மகளே தினமலரே
சீர்பெற வந்தாய் நீ வாழி!
கத்திரி வெயிலாய் காய்கின்றபோது
விற்றமின் „டி“ யாய் மாறுகின்றாய்

வியர்வைத் துளியாய் வீழ்கின்றாய்
விரும்பியே மண்ணில் தாழ்கின்றாய்
கத்தரி வெண்டி காய்கனியாய்;
களனியில் முழைத்தாய் நீ வாழி

காற்றாய் கனலாய் வீசுகிறாய்
கடலிடை நடுவே நீந்துகிறாய்
நேற்றாய் நிறைந்தாய் நினைவாக
இன்றாய் தரிசனம் தருகின்றாய்.

நாளை பொழுதின் நகலாக
காலப் பயணம் செய்கின்றாய்
சித்திரை மகளே நீ வாழி
மாற்றத்தின் சந்தண மணம் வீசி!

கவிக்கோ பரம விஸ்வலிங்கம்

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

Continue reading