மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

சிவதர்சனி இராகவன்

வியாழன் கவி 1889…!

பள்ளிக்காலம்

இன்னும் பசுமையாய் என்னுள்
இனிக்கும் காலம்
இனியும் வேண்டும் என்றே மனம்
தவிக்கும் கோலம்..!

கல்வியில் மேன்மை தங்கியதே
அழகிய பருவம்
பல்விதமாய் நட்புக்கள் பூத்ததே
நினைவில் பூக்கும்…!

ஆசிரியர் சொல்லே மந்திரமாய்
ஏற்றது மனது
ஆசறக் கற்றோம் ஒழுக்கமும்
வந்ததே பண்பாய்…!

புள்ளிகள் பெற்றிடவே போட்டோம்
போட்டா போட்டி
பள்ளியில் பெறாதது எதுவுண்டோ
பெற்றிடவே என்ன வழி…!

வகுப்பேற்றம் தரு மகிழ்வு வெள்ளை
உடையில் சிறகுவிரிப்பு
உயர்தர கல்வியில் கலவன் வகுப்பு
பெரும் கலகலப்பு…!

நன்றியோடு நோக்கும் நம் பள்ளி
வாழ்வு
குன்றாது தழைக்கட்டும் கொக்குவில்
இந்துப் பள்ளி நிமிர்வு…!
சிவதர்சனி இராகவன்
25/10/2023

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading