மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

சிவதர்சனி இராகவன்

வியாழன் கவி 1915

கடந்து வந்த பாதையில்…!

இடர்கள் மிகுந்ததென்றும்
இனிமை நிறைந்ததென்றும்
உயர்வைக் கொடுத்ததென்றும்
உணர்வின் நிறைந்ததென்றும்
கடந்து வந்த பாதையில்
பதிந்ததே பல நினைவுகள்…!

எதிர்பார்ப்புகளும் கொண்டது
ஏமாற்றங்களும் தந்தது
ஏணிப்படியாய் உயர்த்தியது
ஏழ்மையும் மெல்ல விலக்கியது
எத்தனையோ சந்திப்புகள்
எழுச்சி கொண்ட படைப்புகள்
சரித்திரமாய் நிலைத்தது…!

கணக்கற்ற திட்டங்கள்
கழிந்து போன காலங்கள்
விழிகளில் மெல்லப் பதிந்தவை
வியப்போடு இதயம் தாங்கியது
பாமுகத்தின் பயணத்தின் வெற்றிகள்
யாவும் நமக்காய்ப் பதிந்தவையே..!
சிவதர்சனி இராகவன்
21/12/2023

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading