சிவதர்சனி இரா

வியாழன் கவி-1920
பொங்கும் உளமே
தங்கும் தையே…!

மங்காத மனத்திடை
பொங்கிடவே நீ வந்தாய்
எங்கெங்கும் அருள் நிறைய
அணைத்தினை வரவேற்போம்

திங்களின் ஒளியுடை
தித்திப்பே நீ யன்றோ
இங்கெமக்கு நிறை புகழை
நீ ஏந்தி வந்தாயோ

மூத்த மகளாய் நீயும்
முன் நின்று எமை சேர
சீர்பெருகும் என்றே தான்
சிரம் தாழ்த்தி வரவேற்றோம்

பொங்கட்டும் இல்லங்கள்
பொழியட்டும் இன்பங்கள்
சிறக்கட்டும் உழைப்புக்கள்
தங்கட்டும் அன்புள்ளங்கள்..!
சிவதர்சனி இராகவன்
18/1/2024

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading