சிவரஞ்சனி கலைச்செல்வன்

எச்சம்
வண்டினம் செடிகளுக்கு மகரத்தம் காவ
உண்டதை எச்சமாய்
பறவைகள் போட
அண்டத்தில் விலங்குகள்
குட்டிகள் ஈன
ஆண்டவன் படைப்பில்
உயிரினம் பெருக
சந்ததி வளர
கலவை என்று உணவு
பந்தமாய் ஆண் பெண்
பாலினம் இணைவு
அந்தர ஆவலை புணர்விலே
படைத்த
ஆண்டவன் விந்தையே
அகிலத்தின் தொடர்ச்சி
எச்சமாய் இருபால் கலவியின்
இணைப்பை
இதில்தான் தக்கார்
தகவிலர் தகுதி
உச்சமா குறைவா
உணரலாம் என்ற
உண்மையை சொன்னார்
வள்ளுவர் பெருமான்

Nada Mohan
Author: Nada Mohan