தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

சிவரூபன் சர்வேஸ்வரி.

வீணர்கள் நிலை

குருவிக்கூட்டுக்கு கல்லெறிந்து பார்
குருவிகள் பறந்து விடும் -ஆனால்
நீ குளவிக் கூட்டுக்கு கல்லெறிந்து பார்
குளவிகள் கொட்ட வரும்

குணமறிந்து செயலற்ப்பட்டால் -ஒரு
குற்றமும் தெரியாது.
குறுக்கு வழியில் சாதிப்பேனென்று
கொப்பரம் தட்டி நின்றால்

தலை குனிந்து போகும் நிலையும்
வெகு தூரமில்லை.
நல்லவன் போன்று நப்பாசை போட்டு
வேடம் கட்டும் சிலர்- இன்று
நாடெல்லாம் பரவி நின்று
நர்த்தன மாடுகின்றனர்.

உண்மையாய் வாழ்கின்றோம்- என்று
ஓர் முழக்கம்
ஊர் வம்பை வேண்டி- அங்கு
ஒர் பதட்டம்
நல்லவரையும் பந்தாடும் கூட்டம்
நமனுக்குமஞ்சோமென ஓட்டம்

கல்நெஞ்சுக்காரர் செய்யுமாட்டம்
கருணையென்பது இல்லாத தேரோட்டம்
பூவையவள் பாரினிலே
பூகம்பமாய் நின்றாள்
பூம்புகாரா கண்ணகி போன்று
வீம்புகள் செய்யும் வீணர்
கூட்டத்தை
வீர மகளாய்த் தானெழுந்து
நீதியையுரைத்தாலும்-
வீணர்கள் நிலை……..?????

கவிஞர்
சிவரூபன் சர்வேஸ்வரி.

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

    Continue reading