சிவரூபன் சர்வேஸ்வரி

ஒளியின்றி ஒளிர்வெங்கு
-<-<-<-<-<-<-<-<-<-<-<-<-<-<-<-<

உள்ளத்தில் ஒளியின்றி ஊனங்கள் தான் சமந்து
பள்ளத்தில் பள்ளத்துள் வீழ்ந்தவொளி பாதையைக் காட்டிடுமா

வள்ளத்திலேறி நின்று வெளிச்சக்கூட்டைப் பார்த்தேன்
தெள்ளத்தெரிந்த வொளிதிசைகாட்டாமல் தணிந்ததுவே

ஒளியின்றிப்போனதாலே எந்தன் பாதை திசைமாறி நின்றதே
வழிப்பாதை தெரியுமென வள்ளத்தில் தானிருந்தேன்
துளிர்விடும் நிலையுமில்லை
ஒளிவுபெறவொளியுமில்லை
மிளிர்வுடன் நின்றாலும்ஒளியின்றி ஒளிர்வெங்கே

பறையொன்று முழங்குகின்றது

பரமன் வாசலிலே ஒளித்தீபம் தெரிகின்றதே

தெளிந்த வென்சிந்தையிலே தெரியாத புதிராச்சே
சீர் பெறும் சீமையிலே சாந்தி நிலையோங்கிடவே

ஒளியின்றி ஒளிர் வெங்கு ஒளித்தீபம் ஏற்றிடுவோம்…..

கவிஞர்
சிவரூபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan