அதிகரிக்கும் வெப்பம்

நகுலா சிவநாதன் அதிகரிக்கும் வெப்பம் கோடை வந்தால் கொள்ளை மகிழ்வு வாடை குறையும் வசந்தப்பொழுதாய் வேளைதோறும் வெப்ப விடியல் வேண்டும்...

Continue reading

சிவரூபன் சர்வேஸ்வரி

இதயம்
ஃஃஃஃஃஃ

இதயமே என் இதயமே எங்கே போகின்றாய் //
இகமதில் என் எண்ணங்களே எங்கே போகின்றாய் //
மனசுக்குள் மத்தாப்பூ விரிந்து பூக்குமே //
மெளனமே நீயுமோ என்னைக் கொல்கின்றாய் //
சிரிப்பதும் அழுவதும் உன்னெஞ்சும் அல்லவா //
ஆற்றிட வேண்டுமே அறிவால் நீயென்றும் //
மாற்றியும் வைக்கின்றார் இதயம் பார்புள்ள //
மறந்துமே கவலையை தூக்கியெறி புள்ள //
நினைப்பதும் மறப்பதும் இதயம் தான்புள்ள //
ஈனத்தை மறந்துநீ இயல்பாய் எழும்புவாய் //

பூட்டிய கூட்டுக்குள் ஆவி துடிக்குதே //
போனால் வந்திடுமா புரிய வேண்டுமே //

ஏற்றிய தீபத்திலே ஒளியும் மிளிருமே //
காட்டிய பாதையிலே கால்கள் செல்லுமே //
கருணையை நினைத்துமே கடமை செல்லுமே //
காலம் போற்ற வாழ்வாய்யென்றால் இதயம் வாழுமே //

சிவருபன் சர்வேஸ்வரி
✍✍🌸🌸

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

    Continue reading