(திருத்தம் ) நட்பென்றாலே 30.07.2026

நட்பென்றாலே (772 )செல்வி நித்தியானந்தன் அன்பு அரவணைப்பு என்றும் கைகொடுப்பு ஆபத்தில் அறிந்து துணையாகும் சிறப்பு அகிலத்தில் நட்பு நல்லதொரு...

Continue reading

நட்பென்றாலே

செல்வி நித்தியானந்தன் நட்பென்றாலே (772) அன்பு அரவணைப்பு என்றும் கைகொடுப்பு ஆபத்தில் அறிந்து துணையாகும் சிறப்பு அகிலத்தில் நட்பு நல்லதொரு படைப்பு அருமை...

Continue reading

சிவரூபன் சர்வேஸ்வரி

பூக்கும் புத்தாண்டு
ஃஃஃஃஃஃஃஃஃஃஃ

பூக்கும் புத்தாண்டு பொலிவுடன் வருக //
காக்கும் நிலையிலே கருணையுடன் மிளிர்க //
நோக்கும் போதிலே பிணிகளும் ஒழிக //
தேங்கட்டும் செல்வம் செழிப்பாய் நின்றே //

பொங்கட்டும் புதுமைகள் பேரொளியும் போன்றே //
தஞ்சம் என்றே உன்னையே நம்பவே //
கஞ்சமகளாய் சிரித்துமே வருவாய் எழில்பூத்தே //

வண்ணமகளே வாடாத ரோஜாவே வாடியம்மா //
தேடாத திரவியமே தங்கமகளே தைமகளே //

உன்வரவும் என்னாளும் உலகமும் உய்யவே //

உயர்வே உகந்ததே உன்னத நீரோட்டமாய் //
தரவே வருவாய் நிம்மதியும் காணவே //
திறமே உன்னைப் போற்றியும் துதிக்கையில் //
மனமே இனிக்கவே மகிழ்வுகளும் தருவாய் //
இகபரசுகங்கள் இனிதுடன் கிடைக்கவே தினமும் //

பனிவிழும் துளியில் பசுமையும் துளிர்விட //

காய்களும் கனிகளும் கனிந்தே சிறந்திடவும் //

மலைகுலைந்தாலும் மனமும் குலையாத வண்ணம் //

தேன்குழலாய் தித்திப்பாய் தீர்வுடளே நின்று //

காலமகளே கலையமுதே காசினியின் மாதாவே //
அறத்தோடு அன்பும் மேவியே பாய்ந்திட //

மறைநூல் காட்டும் மாதேவி எங்கும் //

இருள் போக்கியே ஒளிவீசிட வேண்டும் //

அருள் கூடவும் அகமினிக்கவும் அருள்வாயே //

பிறைசூடியவா பித்தனே பத்தாவே உன்னடியேநாமே//

சிவருபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan