சிவாஜினி சிறிதரன்

சந்த கவி இலக்கம்_145

“அழகு”
இலை துளிர் காலம்
துளிர் விடும்
மரங்கள்
துள்ளி நடை போடுகையில் பூத்து குலுங்குது பூக்கள்
பாத்திருக்க மலருது
புன்னகையை வரவழைக்கிது வண்ண நிற பூக்கள் வசந்தத்தை வாரி வரவேற்கும்
தனி அழகு!

அழகு என்பது
முகத்தில் மட்டும் அல்ல
சில சமயங்களில்
அரவணைப்பிலும்

மூன்று குழந்தைகள் அவளுக்கு மூன்றும் முத்துக்கள்
அவளின் சொத்துக்கள்

அவள் தன் குடும்ப சுமையுடன்
அண்ணனை அரவணைக்கும் விதம் தனி அழகு

அடைக்கலம்
கேட்டு வந்த
முகம் தெரியாத முகவரி அறியாத இரு உறவுகளுடன் உறவாடி ஆதரவு கொடுக்கும் விதம் அழகு மேல் அழகு
சேர்த்தது என் கண்ணுக்கு
இசைந்து றசித்தேன் கனடாவில்!!

நன்றி
வணக்கம்
சிவாஜினி சிறிதரன்

Nada Mohan
Author: Nada Mohan