அதிகரிக்கும் வெப்பம்
“காலம் போற போக்கைப் பாரு”
சிவா சிவதர்சன்
[ வாரம் 277 ]
“வலி”
வலி தோன்ற ஒரு நொடி போதும்
மறுகணமே அது மறையவும் கூடும்
ஆறாத ரணமாய் தொடரவும் கூடும்
மரணத்தைத்தருவது போலவும் தோன்றும்
பாசத்தைக்காட்டி மோசம் செய்தலும்
நம்பிய நண்பனுக்கு துரோகமிழைத்தலும்
கட்டிய மனைவி கைவிட்டுச்செல்வதும்
மரணவலிதரும்வகையினதாகும்
பிறரைச்சார்ந்து வாழ்தல் மனிதனின் பேதமையாகும்
வெளிச்சமுள்ளவரை நிழல் தொடர்வது வழமையாகும்
பிறர் வாழ்வை பிரதிபண்ணல் வேதனையில் முடியும்
அழகைக்காண அலைதல் மடமையாகும்
காணும்காட்சியில் அழகை உணர்வது அறிவுடமையாகும்
அடைவதில் திருப்திகாணல் வாழ்க்கையை அழகாக்கும்
விழுபவனைத்தாங்க எவரும் முன்வரமாட்டார்
எழுந்தவனை விழுத்த சிலர் தயங்கமாட்டார்
வலியில்லா வாழ்க்கை மனிதனுக்கு கிடைப்பதில்லை
துன்பம்தந்தகாலத்தை மறந்துவிடுதலில் தீமையில்லை
அவைகற்றுத்தந்த பாடத்தை மறந்துவிட்டால் உயர்வில்லை
அனுபவங்களை மறந்துவிட்டால் உனக்கு வெற்றியில்லை.
நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.
