மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

சிவா சிவதர்சன்

[ வாரம் 285 ]
“அழியாத கோலம்”

வண்ணவண்ண மாக்கோலம் தமிழர்முற்றங்களை அழகூட்டும்
நெற்றியிட்ட குங்குமத்துடன் வதனத்தில் வட்டப்பொட்டும்
நேரியகூந்தலில் நிறை மல்லிகை வீசும் மணமும்
இவள் கோலம் தமிழ் பெண்ணென இனங்காட்டும்.

போர்மேகம் மூடி ஈழத்தமிழருக்கிளைத்த சோகம்
தலைமீது பொதியோடு தப்பியோடும் அகதிகளின் வேகம்
என்றும் நினைவூட்டும் தமிழரின் அழியாக்கோலம்
மனை மாடு தோட்ட மென நிறைவாக வாழ்ந்த இனம்

கடைகண்ணி வியாபாரமென பணந்தேடிய சனம்
கல்வியில் தேர்ச்சியும் கேளிக்கை விளையாட்டும்
இன்பமாய் பொழுது போக்கி இயல்பாக வாழ்ந்த சமூகம்
இன்று அகதிகளாய் புலம்பெயர்ந்து இறைஞ்சி வாழுங்கூட்டம்

” மறக்குமா நெஞ்சம்? மீளுமா அந்த அழியாத கோலம்? ”

நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading