சிவா சிவதர்சன்

[ வாரம் 244 ]
“கலவரம்”

இன்று நேற்றன்று என்றுமே இலங்கையில் இனக்கலவரங்கள்
பெரும்பான்மை இனவளர்ச்சியின் அடக்குமுறை உச்சமே கலவரங்கள்
அதிகார வெறியும் சுயநலமும் இனபேதத்தை வளர்ப்பதாகவே அர்த்தம்
இடப்பெயர்வும் புலப்பெயர்வும் அடிக்கடி இடம்பெறும் அனர்த்தம்

உயிரிழப்பு,உடமையிழப்பு, மனையிழப்பு,மானமிழப்பு
உயிர்காக்க ஓடுந்நேரம் தப்பினால்போதும் என்ற நினைப்பு
ஏதுகுற்றமும் இழைக்கவில்லை,எதிர்த்துநின்று போராடவில்லை
சிந்திக்கநேரமும்இல்லை,சென்றாற இடமுமில்லை

உழைத்துவாழ உரிமையில்லை எதிர்த்து நிற்கத்திராணியில்லை
சிறுபான்மை இனமாய் பிறந்தகுற்றம் சீறி எழுந்து போராடவில்லை
திட்டமிட்டுப்போராடி வெல்வது தவிர வேறுவழியில்லை
இனவாதமும் எதிரி தன்னை அடிமைகொண்டு பாடம்புகட்டுவதில் தவறேயில்லை

“கலகம் பிறந்தால்தான் விடிவு பிறக்கும்
கலவரங்களுடன் வாழும்போது பயங்கரமும் பழகிப்போதும்”

நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் அன்னை தரணியில் தாய்க்கு நிகர்யாதும் உண்டோ தற்பெருமை இல்லா காத்திட்ட தெய்வம் அழகுபெற்ற வதனம் பழகுவதும் உறவாய் அன்பிலே இருப்பிடம் பண்பிலே மேலானவர் எட்டுமகவுகள்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

    Continue reading