முயற்சி தரும் பயிற்சி 774

செல்வி நித்தியானந்தன் முயற்சி தரும் பயிற்சி சரீரத்தின் பாதுகாப்பு சஞ்சலமற்ற தற்காப்பு சந்தோச முயல்வு சரிநிகரான நகர்வு காலையிலே. சேர்வும் கற்றதை...

Continue reading

முயற்சி தரும் பயிற்சி

செல்வி நித்தியானந்தன் முயற்சி தரும் பயிற்சி சரீரத்தின் பாதுகாப்பு சஞ்சலமற்ற தற்காப்பு சந்தோச முயல்வு சரிநிகரான நகர்வு காலையிலே. சேர்வும் கற்றதை...

Continue reading

சிவா சிவதர்சன்

[ வாரம் 246 ]
“நிலாவில் உலா”

நிலாவில் உலாவிவர அனைவருக்கும் தீராத ஆசை
தமிழ்பாவலர் உள்ளமதில் என்றுமெழும் மாறாதஓசை
காதலர் மனதின் வெம்மைதீர்க்கும் தண்ணிலவே
மண்ணிலேனும் நிறைவுசெய்தாய் நிலா உலாவே

இயற்கையளிக்கும் இன்பக்கொடையாம் நிலா உலாவே
மனமகிழ்ச்சியும் உடலுற்சாகமும் வழங்கிடுவாய் நிலா உலாவே
உன்னைத்தூதனுப்பி காதலர்க்கு,பாவலர் செய்திடுவார் பெருந்தொண்டு
வானில் நீந்துமுன்னை வீட்டுயன்னலோரம் கொண்டுவருவதுமுண்டு

இதுவரையில் மண்ணிலையே உலாவந்த காதலர்களே
இனிமேலாவது தேன்னிலவை நிலவில் கொண்டாடி மகிழ்வீர்களே
மண்ணிருந்து விண்ணில் கால்பதித்து மனிதன் வெற்றிவாகை சூடிவிட்டான்
எதிர்காலதம்பதிகள் நிலவு சென்று மகிழ்ந்திடவே இலகு வழியும் சமைத்துவிட்டான்.

நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading