மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

சிவா ஜெயமோகன். கவிதை 01.

சிவா ஜெயமோகன்.
கவிதை 01.

அவனியில் எங்கும் அன்னையர் தினமாம்..
அரவணைக்கும் எம்மவர் குலமாம்..
தாய்மையின் மென்மை பெண்மையின் தன்மை..
தரணிக்கே தன்னலம் நல்கிடும் அன்னை..
அன்னையாய் அக்காவாய் தங்கையாய் அரவணைத்து..
ஆசானாய் ஆண்டவனாய் ஆதரிக்கும் தாயவளாய்..
உண்மைக்கு உத்தமியாய் தாய்மைக்குத் தூய்மையாய்..
தன்னலம் கருதாத புன்னகை கொண்டவளே…
அன்னையின் அன்புக்கு ஈடு இணை இல்லையே..
மன்னவரும் தென்னவரும் சேர்ந்திருந்த இல்லமதே..
உன் உயிரினில் கலந்த உதிரமதை தந்தாய்..
கருவறை ஈந்து எமைக் காத்த படைப்புக் கடவுளும் நீயே..
என்னே! சொல்வது பெண்களின் பெருமையை…..உலகின் கண்களும் இப்பெண்கள் தான்..
காத்திடும் கண்கண்ட தெய்வமும் பெண்கள் தான்..
காலத்தால் அழியாத தாய் என்ற கடவுளும் நீதான். நன்றி.

-: சிவா ஜெயமோகன்.
லண்டன்.

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

    Continue reading