நாடொப்பன செய்
மரணித்தவனே மறுபடி வந்தால்
சுமித்திராதேவி சதீஸ குமார்
கைக்குள் கையாய் கைத் தொலைபேசி
உலகை உள்ளங் கையில் தந்தாய்
உறவுகளை மறக்க செய்தாய்
உயிரே போனாலும் உன்னை
உழாவுவதை மறக்க செய்யேன்
மணிக் கனக்காய் உன்னோடு வாழ்கிறேன்
கண் விழித்ததும் உன்னை தேடுகிறேன்
கண்ணெதிரே நீ இல்லையேல் வாடுகிறேன்
முகமறியா உறவுகளை
முன் வந்து நிறுத்தினாய் – என்
மூத்தோர் முதியோர்களை மறக்க செய்தாய்
காதலும் தந்தாய்
கவிதையும் தந்தாய்
கண்கள் இரண்டையும்
காயம் செய்தாய்
தொலை தூர நட்பை தேட செய்தாய்
தொன்மை நட்பை மறக்க செய்தாய்
பாட்டும் தந்தாய் கதையும் தந்தாய்
பாட புத்தகத்தை மறக்க செய்தாய்
உலக செய்தி தந்தாய்
உள்ளூர் செய்தி தந்தாய்
பத்திரிகை தோழனை பார்க்காமல் இருக்க செய்தாய்
கண்ணிமைக்காமல் உன்னை பார்க்க செய்தாய் – என்
கற்பனை திறனை மறக்கடித்தாய்…
இன்னும் செய்தாய்
என் இமைகளை
மூட மறுக்க செய்தாய்….!
-: சுமித்திராதேவி சதீஸ குமார்
– இலங்கை.
– (அறிமுகம் ஜெயா நடேசன்).
