தன்னம்பிக்கை 82

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 22-01-2026 சுற்றியிருக்கும் இருள் சூறையாட நினைத்தால் துணிவெனும் தீச்சுவாலை கொழுந்து விட்டெரியட்டும்! விழுந்தால் எழுவாய் விதிதனை வெல்வாய் விடியும்...

Continue reading

ஜதுர்ஷிகா விஜயகுமார்

கண் அழகி நீயே பெண்ணே
****~~~~~****~~~~~****~~~~~

தெளிந்து ஓடும் நீரிலே
தத்தி நீந்தும்
சிறு மீனை
போல,

உன் அழகு
முகத்திலே நீ
சிமிட்டும் உன்
கண்ணை பார்.

வானம் சூழ்ந்து
நிற்கும்
கார் மேகம்
போல,

அந்த கருவிழி
கண்ணினாலே
என்னை முழுதாய்
சூழ்ந்து கவர்ந்தவளே

இந்த ஒரு
ஜென்மம் போதும்
உன் கண்ணழகை
இரசிக்க மட்டும்

என்ன மாயம்
செய்தாயோ நீ
ஏனோ தெரிய வில்லை,

உன் கண்ணை
மட்டுமே தேடுகிறது
என் கண்கள்.

நீ புருவம்
தூக்கி கோபித்தாலும்
இன்னும் உன்
அழகு கூடுதே.

பெண்ணே உன்
கண் அழகின்
ரகசியம் எதுவென
எனக்கு சொல்வாயா?

*********
ஜதுர்ஷிகா விஜயகுமார்
முல்லைத்தீவு உடுப்புக்குளம்.

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

    Continue reading