முதியோரின் புலம்பல் 2169 ஜெயா நடேசன்

தவிக்கிறேன் தவிக்கிறேன் தனிமையில் மூலையில் முடங்கி கிடக்கும் நிலை கண் தெரியாத பாவியாகி விட்டேன் கைப்பிடித்து தெருவில்...

Continue reading

மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

ஜெபா ஸ்ரீதெய்வீகன்

🙏அனைவருக்கும் வணக்கம்🙏
சந்தம் சிந்தும் கவி
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-32
16-04-2024

பெருமை

யாமறிந்த மொழிகளிலே சிறப்பு
தமிழ் மொழியே நம் பெருமை
இறவாத புகழுடைய பல கவிதை
இயற்றிடலும் எம் கடமை!

கருவாக உயிர் சுமந்த
பெண்ணவளும்
கண்ணாக எனைக் காத்த
தாயவளும்!

நிலைத்த வாழ்வு கொடுரம் கண்டு அடங்கிப் போபவளும்
தொலைத்த கனவு குடும்பத்திற்கென கடமை புரிபவரும்!

நோய் நொடிகள் கண்டு துவண்டிடாமல்
பணிபுரிபவரும்
நோக்கம் அற்று மனமுவந்து
ஈகை அளிப்பவரும்

ஆக்கம் செய்ய கொஞ்சம்
ஊக்கம் செய்யும் ஆசானும்
ஆபத்தில் கோபம் கொண்ட பிள்ளை மேல் கவனம் காட்டும் தந்தையும் பெருமையே!

நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

    Continue reading