மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

ஜெபா ஸ்ரீதெய்வீகன்

அனைவருக்கும் வணக்கம்🙏
சந்தம் சிந்தும் கவி
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-51
12-11-2024

சூர வதை

கார்த்திகை வந்தாலே
கனத்த மனமும்
காந்தள் மலரும்
கல்லறை நினைவும்

இலையுதிர் காலமும்
இயற்கை அழிவும்
அவனி எங்கும்
அக்கிரமங்கள் கூடி

தட்டிக்கேட்போர் இன்றி
தலைக்கணம் ஊன்றி
தலை விரித்தாட
தலைவன் கந்தன்

தரணிக்கு…
தருவார் மறுபிறப்பு
கொடுமைகள் அகன்று
கடுமைகள் அற்று

அறம்வழி நடத்தி
அச்சம் புகட்டி
அறிவு காட்டி
ஆட்கொள்வர் சூரவதை!

நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading