தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

ஜெயம் தங்கராஜா

சசிச

திருநங்கை

தள்ளிவைத்து பிறிம்பு காட்டும் உலகம்
எள்ளி நகையாடி ஒட்டாதே விலகும்
அள்ளி அரவணைத்த அன்னையும் இல்லை
சொல்லவோ வேதனை தந்தையும் இல்லை

மரணத்தை உண்டுபண்ணும் கிருமிகளா இவர்கள்
மனிதரென கருதாமல் இடையிலென்ன சுவர்கள்
சுரப்பதன் குறைபாட்டால் அர்த்தமற்றுப் போவதா
பிரம்மனது படைப்பொன்று இப்படியும் ஆவதா

சரிசெய்ய முடியாத ஆண்டவன் பிழையிது
பரிதாபம் தேடுகின்ற புதுப்பாலின் நிலையிது
ஆணில் பாதியுமாய் பெண்ணில் பாதியுமாய்
காணும் காட்சிகளில் கவலைகளே மீதியுமாய்

உள்ளத்து ஆசைகள் இவர்களிற்கும் உண்டு
வெள்ளை மனங்கொண்ட அவர்களைக் கண்டு
உறவாகி பாசத்தைப் பொழிவது என்று
உருவாகும் நல்ல சமுதாயம் அன்று

ஜெயம்
04-07-2023

Nada Mohan
Author: Nada Mohan