இயற்கை வரமே இதுவும் கொடையே
-
By
- 0 comments
“இயற்கையின் வரமே… இதுவும் கொடையே”
ஜெயம் தங்கராஜா
சசிச
பாட்டி
அம்மாக்கு நிகர் மண்ணில் எவராவார்
அம்மம்மா இரண்டாம் தாய் அவராவார்
எத்தனையோ சொல்லலாம் அவரைப்பற்றி
வற்றிவிடா நினைவுகளாய் மனதைச் சுற்றி
கேட்டுக்கொண்ட உபகதைகள் ஞாபகத்தில் இன்றும்
பாட்டுப்பாடி உரைத்ததெல்லாம் மறக்காது என்றும்
ஊட்டிவிட்டே வளர்த்தார் செய்ததெல்லாம் நன்மை
வீட்டுக்கு காவலாளியாய் இருந்தாரென்பதே உண்மை
கொட்டைப்பாக்கு சுண்ணாம்போடு வெற்றிலையை இடிப்பார்
கொட்டிவிடாது ஒருகையால் அணைத்துமே பிடிப்பார்
குந்திக்கொண்டு இருந்தே இடம்பெறும் நிகழ்ச்சி
சிந்திடாது இடித்து காண்பாரே மகிழ்ச்சி
ஜஞ்சம் இனிப்பு வாங்க கேட்டதும்
கொஞ்சம்பொறு மகனேயென கொட்டப்பட்டியை திறப்பதும்
ஒரிசம் இரண்டீசமாக பத்தீச்சம் கிடைப்பதும்
புரியாத ஆனந்தத்துடன் கடையை அடைவதும்
ஆயிரம் உறவுகளுள் உயர்வானவர் பொக்குவாய்க்கிழவி
தாயினும் தாயான கொசுவ சேலையழகி
அன்று தெரியவில்லை இவரன்பு பெறுமதியென
இன்று தெரிகின்றது இவரொரு வெகுமதியென
ஜெயம்
11-07-2023

Author: Nada Mohan
-
By
- 0 comments
-
By
- 0 comments
-
By
- 0 comments