அதிகரிக்கும் வெப்பம்

நகுலா சிவநாதன் அதிகரிக்கும் வெப்பம் கோடை வந்தால் கொள்ளை மகிழ்வு வாடை குறையும் வசந்தப்பொழுதாய் வேளைதோறும் வெப்ப விடியல் வேண்டும்...

Continue reading

ஜெயம் தங்கராஜா

பள்ளிக்காலம்
கவி 667
வசந்தம் காலத்தை தத்தெடுத்தது பசுமை நினைவுகளை பெற்றெடுத்தது
ஐயமேதுமில்லை பையன்களாக இருக்கையில் கள்ளத்தனமுமில்லை வில்லத்தனமுமில்லை
நெஞ்சில் பாராமுண்டோ கொஞ்சும் நேரமுண்டு ஏக்கங்களில்லாத தூக்கங்களன்று
தோழனாய் தோழியாய் சுற்றியே உலகம் நாளதை மகிழ்ச்சியின்
உச்சத்திலேற்ற்றியது

தாண்டியே அமைதியை குழப்படிகள் வேண்டியதெத்தனை பிரம்படிகள்
பிடித்ததை படிக்காவிட்டாலும் படித்தவையெல்லாம் பிடித்தது
பருவம் அதுவோ பூந்தோட்டம் உருவம் வண்டெனப் போலாடும்
மழையிலும் போடுவோம் கூத்தாட்டம் தொலைந்துவிடாது நினைவுகள் கூட்டம்

சின்னச்சின்ன மனங்களில் வண்ண வண்ண எண்ணக்களிப்பும்
மூளைக்குள் அறிவை நுழைக்க நாளை பொன்னாக செலவழிப்பும்
குயில்களைப்போல கூவினோம் மயில்களைப்போல ஆடினோம்
மயக்கங்களின்றியே சுற்றினோம் பசங்களாய் வாழ்க்கையை கைப்பற்றினோம்
ஜெயம்
26-10-2023

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

    Continue reading